சென்னை: கராத்தே பயிற்சி மேற்கொள்ளும் சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளி மாணவிகளுக்கு கராத்தே சீருடைகளை ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா வழங்கினார். மேயர் அவர்களின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளி மாணவியர் உடல் வலிமையுடனும், மனத்திடத்துடனும், அறிவு வளத்துடனும், சமுதாய நோக்குடனும், சிறந்து விளங்கிடும் வகையில் சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே விளையாட்டுப் பயிற்சியானது, மேயர் அவர்களால் 11.09.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளை தேர்ந்தெடுத்து, வாரத்தில் 2 நாட்களில் 75 நிமிடங்கள், தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலமாக அதற்குத் தேவையான உபகரணங்களுடன் சரியான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 29 சென்னை பள்ளிகளில் 1500 மாணவிகளுக்கு அவர்களின் விருப்பத்துடன் கராத்தே பயிற்சியானது, 10 பயிற்றுநர்களைக் கொண்டு 4 மாதங்கள் வழங்கப்பட்டது. உலக தற்காப்புக் கலை வரலாற்றில் முதல்முறையாக, முதல் சாதனையாக நான்கு மாத பயிற்சியில் 3 உலக சாதனைகளை 25.02.2025 அன்று நிகழ்த்தி, “சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் (The Cholan Book of World Record)” உலக சாதனைகளாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உலக சாதனைகளை உலக அரங்கில் முதலில் முயற்சி செய்தது நமது சென்னை பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் புதிதாக 20 சென்னை பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பள்ளிக்கு தலா 50 மாணவிகள் என 1000 மாணவிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் என வாரத்திற்கு மூன்று நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் என 4 மாதங்களுக்கு கராத்தே பயிற்சி சிறப்பாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சியினை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு மேயர் கராத்தே சீருடைகளை வழங்குவதன் அடையாளமாக புளியந்தோப்பு, அம்மையம்மாள் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு கராத்தே சீருடைகளை இன்று வழங்கி ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், இணை ஆணையாளர் (கல்வி) முனைவர் ஜெ. விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விசுவநாதன், கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கராத்தே சீருடைகள் வழங்கப்படும் 20 சென்னை பள்ளிகளின் விவரம்
1. ஆலந்தூர் ஜல் தெரு சென்னை உயர்நிலைப்பள்ளி
2. சிந்தாதரிப்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி
3. பாடிக்குப்பம், சென்னை உயர்நிலைப்பள்ளி
4. புளியந்தோப்பு, அம்மையம்மாள் தெரு, சென்னை உயர்நிலைப்பள்ளி
5. அப்பாசாமி தெரு, சென்னை மேல்நிலைப்பள்ளி
6. அயனாவரம், சென்னை மேல்நிலைப்பள்ளி
7. செனாய் நகர், சென்னை மேல்நிலைப்பள்ளி
8. ஆல் இந்தியா ரேடியோ நகர், சென்னை நடுநிலைப்பள்ளி
9. அரும்பாக்கம், சென்னை நடுநிலைப்பள்ளி
10. சி.எம்.டி.ஏ. மதுரவாயல், சென்னை நடுநிலைப்பள்ளி
11. கொருக்குப்பேட்டை, காரனேஷன் நகர், சென்னை நடுநிலைப்பள்ளி
12. கிருஷ்ணாம்பேட்டை, சென்னை நடுநிலைப்பள்ளி
13. நைனியப்பன் தெரு, சென்னை நடுநிலைப்பள்ளி
14. பெரம்பூர், பேரக்ஸ் சாலை, சென்னை நடுநிலைப்பள்ளி
15. புழல், சென்னை நடுநிலைப்பள்ளி
16. என்.எஸ். கார்டன், சென்னை நடுநிலைப்பள்ளி
17. இராமநாதபுரம், சென்னை நடுநிலைப்பள்ளி
18. திடீர் நகர், சென்னை நடுநிலைப்பள்ளி
19. சண்முகபுரம், சென்னை நடுநிலைப்பள்ளி
20. காந்திகிராமம், சென்னை நடுநிலைப்பள்ளி
The post கராத்தே பயிற்சி மேற்கொள்ளும் சென்னை பள்ளி மாணவிகளுக்கு கராத்தே சீருடைகளை வழங்கினார் மேயர் பிரியா appeared first on Dinakaran.