சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசிய திமுக பொதுச்செயலாரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், எதிர்க்கட்சிகளை விமர்சித்தபோது, மாற்றுத் திறனாளிகளுக்கான முந்தைய பெயரை குறி்ப்பிட்டு, அவர்களுடன் சேர்ந்து திமுகவை எதிர்க்கின்றனர் என்று பேசினார். இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், மாற்றுத் திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.