சென்னை: கருத்து வேற்றுமைகள் மக்களுக்கு பலன் தராது. எனவே, ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசி மாநில பிரச்சினைகளுக்காக முடிவெடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரோடு பொங்கல் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: