சென்னை: கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,151-ஆக நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம், 9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267, 10.10 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3344.20 ஆக நிர்ணயம், 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ.3,532.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,151-ஆக நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.