சென்னை: “கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இருக்கிறேன்" என்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கூறினார்.
தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, டிரைவரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.