வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது 70-80 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 90 கிமீ வேகத்திலும் காற்று வீசியது. புதுச்சேரியில் 46 செமீ மழை பதிவான நிலையில், தற்போது பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.