பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் தவறான இந்திய வரைபடம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
க‌ர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அண்ணல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதன் 100வது ஆண்டையொட்டி, அங்குகாங்கிரஸ் சிறப்பு செயற்குழு கூட்டம் அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.