பெங்களூரு: கர்நாடகாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களிலும் கன்னட மொழியில் அதன் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் தலைமையிலான அரசு கன்னட மொழி, நீர், நிலம் ஆகியவற்றில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது. நான் பதவியேற்றதில் இருந்தே கன்னட மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். கன்னடர்களுக்கும், கன்னட மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.