கர்நாடகாவில் கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்ஸலைட் இயக்க‌ தலைவர் விக்ரம் கவுடா (44) என்கவுன்ட்டரில் சுட்டுகொல்லப்பட்டார்.
கர்நாடகாவில் உடுப்பி, சிக்கமகளூரு, தட்சின கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்ஸலைட் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அவர்களை கட்டுப்படுத்த கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடக காவல் துறையில் நக்ஸல் ஒழிப்பு படை உருவாக்கப்பட்டது. இந்த பிரிவை சேர்ந்த போலீஸார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாவட்டங்களில் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.