பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் தோல்விக்கு வித்திட்ட‌ ஒப்பந்ததாரர் சங்கத்தின் 40 சதவீத கமிஷன் புகார் 100 சதவீதம் பொய்யானது என விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 2022ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது அம்மாநில ஒப்பந்ததாரர் சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் ஊழல் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினர். இந்த சூழலில் பெலகாவியை சேர்ந்த‌ ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டதால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.