கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் துறை டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள ம‌துகிரியின் காவல் துறை துணை கண்காணிப்பாளராக இருப்பவர் ராமச்சந்திரப்பா (50). கடந்த வாரம் மதுகிரியைச் சேர்ந்த 36 வயதான பெண் ராமசந்திரப்பாவை காவல் நிலையத்தில் சந்தித்து நிலத் தகராறு தொடர்பான புகாரை அளித்தார்.