கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக‌ தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் 2 பெண்கள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, அவர்களை பிடித்து சோதனையிட்டதில் ரூ.75 கோடி மதிப்புள்ள 37.870 கிலோ மெத்தபெட்டமைன் உள்ளிட்ட‌ போதைப் பொருட்க‌ள் சிக்கின‌. இதையடுத்து தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.