ஓசூர்: டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரிகள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தன.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் அனைத்தும், தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்டன.