கர்நாடகாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக திருநங்கை ரேணுகா புஜார் என்பவர் கவுரவ விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநிலம் விஜயநகராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழக பதிவாளர் ரமேஷ் குமார் கூறுகையில், ''எங்களது பல்கலைக்கழகத்தின் கன்னட முதுகலை பிரிவில் ரேணுகா புஜார் (27) என்கிற திருநங்கை கன்னடத் துறையில் கவுரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எங்கள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான அவர் முதுகலை பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.