பெங்களூரு: கட்சித் தலைவர்களை விமர்சித்ததன் காரணமாக கர்நாடக பாஜக எம்எல்ஏவும் முன்னாள் மத்திய அமைச்சருமான‌ பசனகவுடா பாட்டீல் யத்னால் அக்கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் நகர தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் பசனகவுடா பாட்டீல் யத்னால். கடந்த 2023-ம் ஆண்டு முதல் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவையும், அவரது மகனும் மாநிலத் தலைவருமான விஜயேந்திராவையும் கடுமையாக விமர்சித்து வந்தார் யத்னால்.