புதுடெல்லி/பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி யதற்காக. மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மற்றும் உறவினர்கள் 2 பேர் மீது நில முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத்துறை, லோக் ஆயுக்தா வும் விசாரித்து வருகிறது.