விசாகப்பட்டணம்: அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை அழித்தது.
அணு சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் அரிஹந்த் கடந்த 2016-ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் 750 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட கலாம் 15 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தியாவின் இரண்டாவது அணு சக்தி நீர்மூழ்கியான ஐஎன்எஸ் அரிகாட் கடந்த ஆகஸ்ட் மாதம் கடற்படையில் இணைக்கப்பட்டது. விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தை மையமாக கொண்டு இயங்கும் இந்த நீர்மூழ்கியில் 3,500 கி.மீ. சீறிப் பாயும் கலாம் 4 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன.