நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் வெறிநாய் தொல்லை அதிகரித்துள்ளது. நாகர்கோவில் புத்தேரி, கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த சக்தி என்ற 9 வயது சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. காயமடைந்த சிறுமியை பெற்றோர் அழைத்து சென்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுமி குமரி மாவட்ட கலெக்டருக்கு தனது கைப்பட கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்த கடிதம் சமூக வலைதளத்தில் பரவியது. இந்த நிலையில் கலெக்டர் அழகுமீனா சிறுமியை கடித்த தெருநாயை பிடிக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அந்த நாயை ஊழியர்கள் பிடித்து அங்கிருந்து அகற்றினர்.
The post கலெக்டருக்கு எழுதிய கடிதம் வைரல் சிறுமியை கடித்த நாய் பிடித்து அகற்றம் appeared first on Dinakaran.