சென்னை: கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்கள் 10 பேருக்கு தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கிழியாக தலா ரூ.1லட்சம் பரிசு தொகை வழங்கினார்.
தமிழ்நாட்டில் ரூ. 5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், எவர்வான் கோத்தாரி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்கள் 10 பேருக்கு பொற்கிழியாக தலா ரூ.1லட்சம் பரிசு தொகை வழங்கினார்.
மேலும் தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பித்த 5 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும், தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றிய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா ரூ.1.50லட்சம் நிதியுதவியும், 20 மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா ரூ.25.000 நிதியுதவியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
The post கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்கள் 10 பேருக்கு பொற்கிழி வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.