சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி – வேலம்மாள் பொறியியல் கல்லூரி மோதின. முதலில் பேட் செய்த ஆர்எம்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. சுந்தரேசன் 52, திவாகர் 32 ரன்கள் சேர்த்தனர்.
159 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வேலம்மாள் அணி 15.1 ஓவரில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிவசீலன், கார்த்திக் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்எம்கே அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரை இறுதி போட்டியில் ஆர்எம்கே அணி, சாய் ராம் பொறியியல் கல்லூரி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.