சென்னை: கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றி வருகிறார். அதில்,
கல்விதான் நமக்கு ஆயுதம்
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
நான் முதல்வன் திட்டம் பலன் அளித்துள்ளது
மாணவர்கள் மீதும், நான் முதல்வன் திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை பலன் அளித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு என்று ஒரு அறிவுமுகம் இருக்கிறது; IAS, IPS தமிழ்நாட்டு கேடர் ஆக இருந்தால் அதன் மதிப்பே தனி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தால் இன்னும் மதிப்பு கூடும். யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள். யு.பி.எஸ்.சி. யில் தமிழக இளைஞர்கள் தேர்ச்சி குறைந்திருந்த கவலையை நீங்கள் போக்கிவிட்டீர்கள்.
50 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் படித்த 50 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் இந்திய அளவில் 23வது இடம் பெற்று சாதனை படைத்தார். வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் தமிழ்நாட்டில் இருந்து வந்த உங்கள் பணி சிறக்கவேண்டும். எங்கு பணிபுரிந்தாலும் சமத்துவம், சமூகநீதி, நேர்மையுடன் மக்கள் உயர்வுக்கு பாடுபட வேண்டும்.
வரும் ஆண்டில் 100 பேர் தேர்ச்சி பெற வேண்டும்
100 பேராவது யுபிஎஸ்சி தேர்வில் வரும் ஆண்டில் வெற்றிபெற வேண்டும் என்பது அரசின் விருப்பம். எந்தவொரு போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெறவே ‘நான் முதல்வன் திட்டம். நாளை உங்கள் பெயரை ரோல் மாடலாக சொல்லும் அளவுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும். அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும், எளியோர்களுக்கும் உதவும் வகையில் இருக்கவேண்டும். தெரிவித்தார்.
The post கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது: யு.பி.எஸ்.சி. தேர்வு பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.