சென்னை: மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடத்தப்பட்டது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகளை நேற்று வெளியானது. அவற்றை மாணவர்கள், பெற்றோர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், இத்தேர்வுக்கான ஊக்கத் தொகை பெறுவதற்கு தகுதிபெற்ற 6,695 மாணவர்களின் விவரப் பட்டியலும் மேற்கண்ட வலைத்தளத்திலே வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.