மும்பை: “புதிய கல்விக் கொள்கை நமது கல்வி முறையை இந்திய மயமாக்குகிறது. எனவே, அதனை சோனியா காந்தி ஆதரிக்க வேண்டும்” என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை தனதாக்கும் மத்திய அரசின் முயற்சி (centralisation), கல்வியை வணிகமயமாக்குவது (commercialisation), பாடப்புத்தகங்களில் வகுப்புவாத கருத்துகளைத் திணிப்பது (communalisation) ஆகிய மூன்று c-களும் இந்தியக் கல்வி முறையை வேட்டையாடுவதாக விமர்சிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் கட்டுரை ‘தி இந்து’-வில் இன்று வெளியானது. வாசிக்க > இந்தியக் கல்வி முறையை வேட்டையாடும் மோடி அரசின் 3 ‘C' – சோனியா காந்தி விவரிப்பு