ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், ஒற்றை ஆளாய் ஆளும் கட்சியை எதிர்த்து களத்தில் நிற்கிறது சீமானின் நாதக.
2016-ல் 1.1 சதவீதம், 2019-ல் 3.87, 2021-ல் 6.58 சதவீதம் என படிப்படியாக தனது வாக்கு வங்கியை வளர்த்த நாம் தமிழர் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இப்படியான சூழலில், “கொங்கு எங்கள் கோட்டை” என மார்தட்டும் அதிமுக-வும் பாஜக-வும் இடைத்தேர்தலை புறக்கணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலுடன் களத்துக்கு வந்திருக்கிறார் சீமான்.