சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சின்னதுரை, ஷாகுல் ஹமீது ஆகியோரின் ஜாமீன் மனுக்களுக்கு பதிலளிக்குமாறு சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னதுரை மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குண்டர் சட்டத்தில் இருவரையும் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கைது காரணமாக அவர்களின் குடும்ப பெயர் பாதிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, மனுவுக்கு ஜனவரி 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
The post கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் ஜாமீன் கேட்டு 2 பேர் மனு.! சிபிசிஐடி பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.