சென்னை: “கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம். இந்த கொண்டாட்டம் நமது பாரம்பரியத்தின் வலிமையையும், காலத்தால் அழியாத ஒற்றுமையில் நம்மை ஒன்றிணைக்கும் உணர்வையும் தெளிவாக பிரதிபலிக்கிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரசித்தி பெற்ற வைகை கள்ளழகர் திருவிழாவையொட்டி வாழ்த்துகள். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம்.