எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘கிராண்ட் ஃபாதர்’ என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
71-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘பார்க்கிங்’ படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தேசிய விருது வென்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.