
கொல்கத்தா தோல்வி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. கம்பீர் குண்டுகுழியுமான பிட்சை தண்ணி காட்டாமல் அப்படியே கொடுங்கள் என்று கேட்டது இந்திய அணிக்கு எதிராகவே திரும்பியது. நியூஸிலாந்துக்கு எதிராக அப்படித்தான் ஆனது, உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் டாக்டரிங் செய்யப்பட்ட பிட்சில் தோற்றது இந்திய அணி.
இப்படி எப்போதெல்லாம் பிட்ச் கேட்கப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல்விதான் என்று தெரிந்தும் கம்பீர் எப்படி இப்படி கிழிந்து தொங்கும் பிட்சைக் கேட்கலாம்? இந்தக் கேள்வியையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்த கவாஸ்கர் ‘கம்பீருக்கு முழு ஆதரவு…’ பிட்சில் ஒன்றும் பூதம் இல்லை, பேட்டர்கள் உத்தி சரியில்லை என்று கம்பீரின் ‘யெஸ் மேன்’ ஆகிவிட்டார்.

