புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீருக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான கவுதம் காம்பீருக்கு, 2 முறை மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் நான் உன்னை கொல்லப்போகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.