புதுடெல்லி: ராகுல் காந்தி ஒரு தேசத்துரோகி என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அங்கு பாஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடைபெற்றது. அதற்கு தேர்தல் ஆணையம் துணைபோனது" என்று குற்றம் சாட்டினார்.