புதுடெல்லி: "காங்கிரஸுக்கும் – அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும் தொடர்பு இருக்கிறது. நாட்டினை சீர்குலைப்பதற்காக பல பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுகிறது" என மாநிலங்களவையில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியால் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நண்பகலுக்கு முந்தை அமர்வுக்கான அலுவல்களுக்கான ஆவணங்கள் வைக்கப்பட்ட பின்பு, அன்றைய அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய ஆறு நோட்டீஸ்களையும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நிராகரிப்பதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.