தி டெய்ர் அல் பலாஹ்: காசாவில் முகாமாக மாற்றப்பட்ட பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானார்கள். காசா சுகாதார அமைச்சகத்தின் அவசர சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜபாலியா பகுதியில் இருந்த பள்ளிக்கூடம் தங்குமிடமாக மாற்றப்பட்டு இருந்தது. இந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. ஆனால் தீவிரவாதிகளை மட்டும் தான் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் காசாவில் இருக்கும் கடைசி அமெரிக்க பிணை கைதி விடுவிக்கப்படுவார் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் எடன் அலெக்சாண்டரின் விடுதலை எதிர்பார்க்கப்படுகின்றது. அதிபர் டிரம்பிற்கான நல்லெண்ண நடவடிக்கையை உணர்த்தும் வகையில் அமெரிக்க பிணை கைதியை ஹமாஸ் விடுவிக்கின்றது.
The post காசா பள்ளி மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 16 பேர் பலி appeared first on Dinakaran.