டெல் அவிவ்: காசா முழுவதையும் கைப்பற்றுவதற்கான புதிய திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் மாதம் தோல்வியடைந்தது. இதனையடுத்து இஸ்ரேல் தனது நடவடிக்கைக்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பகுதிகளை கைப்பற்றி உள்ளது. காசாவில் சுமார் 50 சதவீத பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றி உள்ளது. போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே காசாவிற்கு உணவுப்பொருள், எதரிபொருள், தண்ணீர் உட்பட அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் நிறுத்திக்கொண்டது. இது சுமார் 19 மாத போரில் மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடியாக கருதப்படும் நிலைக்கு வழிவகுத்தது.
இஸ்ரேல் ஹமாஸ் மீதான அழுத்தத்தை அதிகரிக்க முயற்சித்து வருகின்றது. இந்நிலையில் காசா முழுவதையும் கைப்பற்றுவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய திட்டங்களுக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த புதிய திட்டம் ஹமாசை தோற்கடிப்பது மற்றும் காசாவில் உள்ள பிணை கைதிகளை விடுவிப்பது என்ற இஸ்ரேலின் போர் நோக்கங்களை அடைவதற்கு உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவிற்கு செல்வதற்கான நெருக்கடிக்கு இந்த திட்டம் தள்ளக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
The post காசா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் முடிவு: புதிய திட்டத்துக்கு ஒப்புதல் appeared first on Dinakaran.