காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொழிற் சட்டங்களை மதிப்பதில்லை என்றும், அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிஐடியூ சார்பில் இன்று (டிச.28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் இ.முத்துக்குமார், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் கே.நேரு உள்பட பலர் பங்கேற்றனர். தென்கொரிய நிறுவனமான எஸ்.எச் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழிற் சங்கம் அமைத்தற்காக ஆறு மாதம் வேலை மறுப்பு, டிஸ்மிஸ், இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் சங்க ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளது.