* சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வரும் 18ம் தேதி கடைசி நாள்
சென்னை: சென்னை எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் 2024ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்காக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணி அமைப்பு, குற்ற வழக்குகள் தொடர்புக்கு உதவியாக 5 சட்ட ஆலோசகர் பணியிடங்கள் காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய சரகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்ட ஆலோசகராக பணி நியமனம் செய்யப்படுவோர்க்கு மாதம் ஊதியம் ரூ.50 ஆயிரம் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும். பிற படிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. மேற்கண்ட சட்ட ஆலோசகர் பதவிக்கு தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் www.tnpolice.gov.in விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 18ம் தேதிக்கு முன் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப உறையின் மீது சட்ட ஆலோசகர் பணிக்கான விண்ணப்பம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். பதிவு அஞ்சல் மூலமாக அனுப்படும் விண்ணப்பங்கள், ‘கூடுதல் காவல்துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, 220, பான்தியன் சாலை, எழும்பூர், சென்னை 600008’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The post காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் சரகத்திற்கு சட்ட ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.