காஞ்சிபுரத்தில் யாத்ரி நிவாஸ் அருகே செயல்படும் வாகன நிறுத்தம் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் நுழைவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சர்வதீர்த்த குளம் அருகே ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.
பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்ரி நிவாஸ் மற்றும் அதனுடன் இணைந்து வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்திவிட்டு, அங்கிருந்து பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட உள்ளூர் வாகனங்கள் மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கு, வணிக நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும்.