உன்னி முகுந்தன் நடித்து சூப்பர் ஹிட்டான ‘மார்கோ’ படத்தை தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படம், ‘காட்டாளன்’.
இதில் மலையாள நடிகர் பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்தத் திவாரி ஆகியோர் நடிக்கின்றனர்.