கோவை: கன்னியாகுமரி மாவட்டம் கூவைகாடுமலையை சேர்ந்தவர் அசோக்குமார் (52). இவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 10ம் தேதி மாலை தோலம்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்குள் ஒற்றை காட்டு மாடு புகுந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற அசோக்குமார், பணியாளர்களுடன் இணைந்து அதை விரட்டும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது சீமை கருவேல புதரில் மறைந்து இருந்த காட்டு மாடு திடீரென அசோக்குமாரை கொம்பால் குத்தியதில் அவரது இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அசோக்குமார் உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர்.
The post காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் பலி appeared first on Dinakaran.