வேலூர்: வேலூரில் நடைபெற்று வரும் அமலாக்கத் துறை சோதனையில் எம்.பி. கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாதுகாப்புடன் ஒரு வெள்ளை வேனில் அனுப்பி வைக்கப்பட்டது. கல்லூரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு உள்ளது. இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதி எம்பியாக உள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அமைச்சர் துரைமுருகன் தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் உள்ளார். கதிர் ஆனந்த் குடும்பத்துடன் விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அவர் வரும் 7-ம் தேதி இந்தியா வருகிறார்.