தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (24). 2023ல் காவல்துறையில் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பணியை முடித்த காவேரி செல்வி, தெற்கு காவலர் குடியிருப்பு வீட்டிற்கு வந்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
இதில் சந்தேகப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள், தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது உள்பக்கம் கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து பார்த்த போது அங்கு காவேரி செல்வி தனது துப்பட்டாவில், தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காவேரி செல்வி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
The post காதல் தோல்வி பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.