‘ராவணக் கோட்டம்’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் கணேஷ் சரவணன். அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், இப்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் பிரக்யா, ஆயிஷா, புகழ் என பலர் நடிக்கின்றனர்.
மறைந்த நடிகர் ரகுவரனின் தம்பி, ரமேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்குகிறார். சத்யா இசை அமைக்கிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் இப்படத்தை ஆஃப்ரின்ச் புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பாக ஆஃப்ரின்ச் தயாரிக்கிறார்.