
சென்னை: துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக துல்கர் சல்மான் நடித்து வரும் ‘காந்தா’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.இப்படம் வரும் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

