காரைக்குடி: காரைக்குடியில் காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்ற ரவுடி மனோஜ் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (23) இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி இவர் மீது பல்வேறு வழக்குகள், பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளது. கடந்த ஆண்டு கஞ்சா சிக்கிய வழக்கில் சிறை சென்று பிணையில் வெளிவந்தார். பிணையில் வந்த அவர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போடுவதற்காக நண்பர்களுடன் வந்தவர்.
ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு அங்கிருந்து காவல் நிலையத்தைவிட்டு வரும் போது இவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் இவரை துரத்தியது. பைக்கில் முன்னாள் சென்றவர்களை காரில் இடித்து அங்கிருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து 100ஆடி சாலையில் ஓடிய நபரை மர்ம கும்பல் ஒன்று ரத்த வெள்ளத்தில் அவரை சரமாரியாக வெட்டி காரில் தப்பி சென்றது. இச்சம்பவம் காரைக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post காரைக்குடியில் காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்ற ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.