நலன் குமரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’, பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இதையடுத்து ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது, கார்த்தியின் 29-வது படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, சிம்புவின் ‘மாநாடு’ படங்களில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.