காலணி, தோல் துறைகளை மேம்படுத்தும் வகையிலும் 22 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட்டில் புதிய திட்ம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் காலணி, தோல் துறையின் உற்பத்தித் திறன், தரம், போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். ரூ. 4 லட்சம் கோடி வருவாய் ஈட்டும், ரூ. 1.1 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.