சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை, சுற்றுலா மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி நாளை (இன்று) பாம்பன் பாலம் திறந்து வைப்பதற்காக ராமேஸ்வரம் வர இருக்கின்ற நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
கூட்டணி கட்சியினரும் கலந்துகொள்கின்றனர். ஓராண்டு காலமாக நியமிக்கப்படாமல் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மட்டுமல்லாமல், மொத்தம் 10 மாவட்டங்களில் மாவட்ட தலைவர்கள் இல்லாமல் உள்ளனர். அதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மிக விரைவில் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
The post காலியான 10 மாவட்ட தலைவர் பதவிகள் விரைவில் நியமிக்கப்படும்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.