சென்னை: காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக 5-வது காவல் ஆணையம் 1,200 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
காவல்துறையினர், பணியிலும் பணியிடத்திலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் பணி மற்றும் குடும்பத்தில் சமநிலையை மேற்கொள்ள முடியாமல், சோர்வடைந்து மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ளவும் செய்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க காவல்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.