காவல்துறையினர் தேர்வில் இருந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதால், தனது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் தனது அறை எரிக்கப்பட்டதாக தமிழக ஏடிஜிபி ஒருவர் குற்றம்சாட்டிய கடிதம் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை காவல் துறை மறுத்திருக்கிறது. என்ன நடக்கிறது?