சென்னை / மதுரை: ‘உளுந்தூர்பேட்டை காவல் துறையின் விளக்க அறிக்கை, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஒருபக்கச் சார்புடையதாகக் கருதுகிறோம்’ என்று மதுரை ஆதீனம் மடம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை ஆதீனம் மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையை மறுக்கிறோம். அதில் விபத்து தொடர்பாக ஆதீனம் தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் உளவுப் பிரிவு அதிகாரிக்கும், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாலையில் உளவுத் துறை டிஎஸ்பி எங்களிடம் பேசி சம்பவம் குறித்து முழுமையாகத் தெரிந்து கொண்டார்.