சென்னை: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப்பணிகள் குறித்து அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவைக்கு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். நதிநீர் இணைப்பு என்பது விவசாயிகளின் கனவு திட்டம். மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டால் உபரி நீர் கடலில் கலக்கிறது என்று சட்டப்பேரவையில் சி.விஜயபாஸ்கர் கூறினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், காவிரி-வைகை- குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்துக்கு முதலில் அடித்தளம் இட்டவர் கலைஞர்தான். முன்னுரிமை அடிப்படையில் காவிரி-வைகை-குண்டாறு இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் அடுத்த தலைமுறைக்கானது, விரைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
The post காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: கவன ஈர்ப்பு appeared first on Dinakaran.